பராமரிப்பு பணி காரணமாக தூத்துக்குடியில் 27ஆம் தேதி குடிநீர் விநியோகம் ரத்து!- மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!


தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வருகிற 27ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ வெளியிட்ட செய்திக்குறிப்பில், 

தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையத்தில் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்பு கார நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகின்ற 27ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்றும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post