தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் ரூபாய் 231.21 கோடி மதிப்பில் பல்வேறு திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா துறைமுக அலுவலக வளாகத்தில் இன்று துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து மற்றும் ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனாவால்
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்திற்கு வருகை புரிந்து ரூபாய் 100 கோடி திட்டமதீப்பிட்டில் 1300 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவிருக்கும் கடலோர வேலைவாய்ப்பு அபிவிருத்தி திட்டத்திற்கு (Tuticorin SPEEDZ) அடிக்கல் நாட்டியும்,
ரூ.16 கோடி செலவில் நிலக்கரி சேமிப்பு சாலை மற்றும் வடிகாலினை மேம்படுத்துதற்கான பணியினை துவக்கி னைத்தும் மற்றும் ரூபாய் 65.53 கோடி செலவில் உள்துறைமுக வளர்ச்சி பணிகளான (துறைமுக நுழைவுவாயிலை அகலப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்தப்பட்ட பகுதியை ஆழப்படுத்துதல்) பணிக்கான அடிக்கலை நாட்டினார்.
மேலும் நவீன துறைமுக திட்டங்களான ரூ.2.29 கோடி செலவில் துறைமுகத்தின் கப்பல் போக்குவரத்திற்கான இந்திய மென்பொருள் வடிவமைப்பினை துவக்கி வைத்தார். இவ்வாறாக நம் நாட்டிலே தயாரிக்கப்பட்ட மென்பொருளை உபயோகிப்பது,
அயல்நாடுகளிலிருந்து தயாரிக்கப்படும் இத்தகைய மென்பொருளை வாங்குவதை நிறுத்துவது மட்டுமல்லாமல் அந்நிய செலவானியினையும் பெருமளவில் குறைக்கும். மேலும் ரூ.1.15 கோடி செலவில் ஆப்டிக் பைபர் இணைப்பினை (Optical Fiber Cables) துவக்கி வைத்தார்.
பாரத பிரதமர் அறிவுறுத்தலின்படி மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து மற்றும் ஆயுஷ் அமைச்சர் ரூ.26.93 கோடி செலவினாலான பசுமை துறைமுக திட்டங்களான 100 சதவிகிதம் LED ஒளிவிளக்கு பயன்பாடு,
மின்சாரத்தால் இயங்க கூடிய கார்கள் மற்றும் 140 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூரை சூரியமின் ஆலையினை துவக்கி வைத்தார்கள். மேலும் பொதுமக்கள் பயன்படுத்த கூடிய வாகன மின்வூட்டி மையங்கள், 2 மெகாவாட் காற்றாலை, 4000 கிலோவாட் மேற்கூரை சூரியமின் ஆலை ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், ரூ.46.51 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள எளிய வாணிப திட்டங்களான சரக்குபெட்டகங்களை கதரியக்க சோதனை மையம் மற்றும் 140 மெட்ரிக் டன் மின்னனு இரயில் எடை நிலையம் ஆகிய திட்டங்களை துவக்கி வைத்தார்.
ரூபாய் 1.78 கோடி திட்டமதிப்பீட்டிலான மக்கள் நலத்திட்டங்களான மருத்துவ ஆக்ஜிசன் ஆலை, ஒருங்கிணைந்த மருத்துவம் மற்றும் ஆயுஷ் பிரிவு மற்றும் வ.உ.சி கடற்சார் அருட்காட்சியகம் ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து விழாவில் பேசிய மத்திய அமைச்சர்
2025-ம் ஆண்டிற்குள் நமது நாடு 5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார வளர்ச்சியினை அடைவதற்கு முக்கிய காரணியான போக்குவரத்து தளவாட செலவுகளை குறைப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது என்று கூறினார்.
மேலும் அவர் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தால் எடுக்கப்பட்டுள்ள பசுமை துறைமுக முயற்சிகள். 2030-ம் ஆண்டிற்குள் நம் நாட்டில் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியின் பங்கை 60 சதவிகிததற்கு அதிகரிக்க அனைத்து பெரிய துறைமுகங்களுக்கும். வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தரநிலையை உருவாக்கியுள்ளது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபடி, இந்திய அரசு வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தினை நாட்டின் கிழக்கு கடற்பகுதியின் சரக்குபெட்டக பரிமாற்ற முனையமாக மாற்றுவதாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று கூறினார்.
விழாவில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன், இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் சிறப்புரை ஆற்றினார். விழாவில், முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, துறைமுக மூத்த அதிகாரிகள், துறைமுக உபயோகிப்பாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்
முன்னதாக அமைச்சர் துறைமுகத்தின் செயல்பாடுகள் மற்றும் விரிவாக்க திட்டபணிகளை ஆய்வு செய்தார். துறைமுகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை அவர் பார்வையிட்டார்.