தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி படித்துவரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- வழங்கும் " புதுமைப் பெண் திட்டம் " மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சென்னையில் இருந்து காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 383 மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான டெபிட் கார்டுகளை வழங்கினார்
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாணவிகளின் உயர்கல்வியில் கற்பதில் எந்தவிதமான தடையும் இருக்கக் கூடாது என்ற வகையில் ஒரு தந்தையாக இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த உதவித் தொகையை வழங்கி வருகிறார்
இதன் மூலம் பெண்கள் கல்வி தரம் உயரும் என தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா , மார்க்கண்டையன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ்,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ரதிதேவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.