தூத்துக்குடியில் தமிழ்நாடு H.M.S உழைப்பாளர் சங்கம் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நேற்று தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள H.M.S சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
இதில், மாவட்ட தலைவராக ராஜ்குமார், மாவட்ட பொதுச் செயலாளராக துறைமுகம் சத்யா, தமிழ்நாடு உழைப்பாளர் சங்க மாவட்டத் தலைவர் ராஜலட்சுமி ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் காந்தி சேகர் (SRMU) ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்டச் செயலாளர் துறைமுகம் சத்யா கூறுகையில்,
தமிழ்நாடு உழைப்பாளர் சங்கம் பலம் வாய்ந்த சங்கமாக இருந்து வருகிறது. தூத்துக்குடியில், வருகிற செப்டம்பர் 25ம்,தேதி மிக பெரிய மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த மாநாட்டில் 5,000 தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள்.
மத்தியில், மாநிலத்தில் இருந்து தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். உழைப்பாளர் சங்கம் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சேராத இயக்கமாகும்.
மத்தியில் ஆளும் அரசாங்கமானது, தொழிலாளர்களுக்கு ஏற்கனவே இருக்கும் 44 சட்ட தொகுப்புகளை 4 சட்ட தொகுப்புகளாக தொழிலாளர்களின் குரல் வளையத்தை நேரிகின்ற வகையில், உயிரை பறிக்கும் வகையில் உள்ளது.
தொழிலாளர் வயிற்றில் அடிக்கின்ற வகையிலும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக எடுக்கும் முடிவினை எதிர்த்து சங்கம் போராடி வருகிறது. ஆகவே இந்த சட்ட தொகுப்பு எதிர்த்து தீர்மானம் இயற்ற இருக்கிறோம். என கூறினார்.