திருப்பூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான விளையாட்டுப்போட்டிகளை அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி நடத்தி வருகின்றது.
மாணவியர்கள் 14, 17 & 19 வயதிற்குட்பட்டோர்களுக்கான கபாடிப் போட்டிகள் பிளாட்டோஸ் அகாடமி பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் இயக்குநர் ஹரிகிருஷ்ணன், பள்ளியின் முதல்வர் ஸ்ரீகுமாரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) முருகேஸ்வரி, கோவில்வழி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராமராஜ், கல்வியாளர் ராஜேந்திரன் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.
14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 8 அணிகள் கலந்துகொண்டன. இறுதிப்போட்டியில் பிளாட்டோஸ் அகாடமி பள்ளி அணி 53 : 21 என்ற புள்ளிக்கணக்கில் சர்க்கார் பெரியபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி அணியை வென்றது.
17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 6 அணிகள் கலந்துகொண்டன. இறுதிப்போட்டியில் சர்க்கார் பெரியபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி அணி 30 : 14 என்ற புள்ளிக்கணக்கில் வித்ய விகாஸ் பள்ளி அணியை வென்றது.
19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 6 அணிகள் கலந்துகொண்டன. இறுதிப்போட்டியில் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி 30 : 15 என்ற புள்ளிக்கணக்கில் பிளாட்டோஸ் அகாடமி பள்ளி அணியை வென்றது.
குறுமையப் போட்டிகளின் கண்காணிப்புக்குழு உறுப்பினர் முருகன் தலைமையில், குறுமைய இணைச் செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில், நடுவர்களாக ஆனந்தன், பாலசுப்பிரமணி, மணிமன்னன், சிவலிங்கம், மணிகண்டன், சந்தோஷ், சுரேஷ், பாலகணேஷ், பாஸ்கரன் ஆகியோர் செயல்பட்டனர்.