தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ளே அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மின்சார வாரிய ஊழியர்கள் பணி முடக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பாஜக அரசு மின்சார வாரியங்களை முடக்கும் வகையிலும், மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் வகையிலும், மின்சார சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய உள்ளது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மின்சார வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தின் உள்ளே மத்திய அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசு மின்சார சட்ட மசோதாவை உடனடியாக கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து பணி முடக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கலந்துகொண்ட பொறியாளர்கள் பணியாளர்கள் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் அப்பாதுரை சிஐடியு தெர்மல் சங்க செயலாளர் கணபதி சுரேஷ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.