புளியம்பட்டி-ஆக.11
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, இந்திய தேசிய 75வது சுதந்திர தின அமுத பெரு விழாவையொட்டி, இல்லந்தோறும் இந்திய தேசியக் கொடி ஏற்றுவதற்கு , புன்செய்ப் புளியம்பட்டி நகர்மன்றத்தின் சார்பில் புன்செய்ப் புளியம்பட்டி நகராட்சி பகுதி மக்களுக்கு, வார்டு வாரியாக, இந்திய தேசியக்கொடி வழங்கும் தொடக்க நிகழ்வு நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நகர்மன்ற தலைவர் T.ஜனார்த்தனன் நகர்மன்ற துணைத்தலைவர் பி.ஏ.சிதம்பரம் ஆகியோர் நகராட்சி ஆணையாளர் மு.சக்திவேல்முருகனிடம் இந்திய தேசிய கொடியை வழங்கினர். உடன் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள்.