டாஸ்மாக் கடையை அகற்ற கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பாஜக மனு.!


தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் புன்னக்காயில் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும் புன்னகாயல் பகுதியில் உள்ள தார் சாலை சீர் செய்து தரும்படியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். 

இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுருப்பாதவது; 

தூத்துக்குடி, ஆத்தூர் புன்னக்காயல் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் மற்றும் சேர்ந்தபூமங்களம் பஞ்சாயத்தை சார்ந்த குமார பன்னையூர் செல்வன் புதியனூர் புதுநகர் புன்னகாயல் செல்வதற்கு இந்த ஒரு சாலை மட்டும் இருக்கிறது. 

மேற்படி 2 பிரச்சனைக்காவும் (27.06.2022) அன்று டாஸ்மாக் கடையையும் சாலையை சீர் செய்து தரும்படியும் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அன்று நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் திருச்செந்தூர் வட்டாட்சியர் நேரில் வந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து மேல்கண்ட 2 பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்கள்.

அதன் பிறகு தார் சாலையை J.C.B. யை வைத்து பெயர்த்து போட்டுள்ளார்கள். வேலைக்கு செல்லும் பொதுமக்களும் பள்ளி செல்லும் மாணவர்களும் பத்திரமாக வருவார்களா என்று அச்சத்தோடு உள்ளார்கள். மேற்படி ரோடு குளக்கரையாக இருப்பதாலும் பொதுமக்கள் நிலை தடுமாறி அருகில் உள்ள குளத்தில் விழுந்து விடுகிறர்கள்.

மேலும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அடிக்கடி விபத்து நடந்து கிழே விழுந்து காயப்படுகிறார்கள் மற்றும் டாஸ்மாக் கடையும் இன்னும் மாற்றப்படாமல் உள்ளது.

அதனால் தாங்கள் உடனடியாக இவ்விரண்டு பிரச்சினைக்கும் திருந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டு இருந்தது.

Previous Post Next Post