தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.!*


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ்,   தலைமையில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  இன்று  நடைபெற்றது. கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, 

பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை,  விதவை உதவித்தொகை  உள்ளிட்ட  பல்வேறு  நலத்திட்ட  உதவிகள் கோரி 310 கோரிக்கை  மனுக்கள்  பெறப்பட்டது.  

பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு  அறிவுறுத்தினார்கள். மேலும், நீரில் மூழ்கி இறந்தவரின் மனைவிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியிலிருந்து                              


ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினையும், 01 மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகைக்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.கண்ணபிரான், மகளிர் திட்ட இயக்குநர் மரு.வீரபத்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)அமுதா, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post