திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான மாணவ, மாணவியர்களுக்கான கேரம் போட்டிகள்
இக்கல்வியாண்டிற்கான திருப்பூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான விளையாட்டுப்போட்டிகளை அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி நடத்துகிறது.
மாணவ, மாணவியர்கள் அனைத்து பிரிவினர்களுக்கான கேரம் போட்டிகள் பல்லடம் சாலையிலுள்ள, காந்தி வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. உடற்கல்வி ஆசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். காந்தி வித்யாலயா பள்ளியின் முதல்வர் முத்துகண்மணி தலைமை வகித்தார். ரோட்டரி சங்கங்களின் ஆளுநர் இளங்குமரன் வாழ்த்துரை வழங்கி போட்டிகளை துவக்கி வைத்தனர். உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தன் நன்றி கூறினார்.
மாணவர்கள் போட்டி முடிவுகள்
14 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் 29 அணிகள் பங்கேற்றன. பெருந்தொழுவு அரசு பள்ளி முதலிடமும், கே.எஸ்.சி அரசு பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
14 வயதுக்குட்பட்டோர் இரட்டையர் பிரிவில் 28 அணிகள் பங்கேற்றன. கே.எஸ்.சி அரசு பள்ளி முதலிடமும், பெருந்தொழுவு அரசு பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
17 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் 24 அணிகள் பங்கேற்றன. காந்தி வித்யாலயா பள்ளி முதலிடமும், பிரைட் பப்ளிக் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
17 வயதுக்குட்பட்டோர் இரட்டையர் பிரிவில் 26 அணிகள் பங்கேற்றன. பெருந்தொழுவு அரசு பள்ளி முதலிடமும், கே.எஸ்.சி பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
19 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் 14 அணிகள் பங்கேற்றன. பெருந்தொழுவு அரசு பள்ளி முதலிடமும், காந்தி வித்யாலயா பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
19 வயதுக்குட்பட்டோர் இரட்டையர் பிரிவில் 14 அணிகள் பங்கேற்றன. வீரபாண்டி அரசு பள்ளி முதலிடமும், பிரண்ட்லைன் அகாடமி பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
மாணவியர்கள் போட்டி முடிவுகள்
14 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் 25 அணிகள் பங்கேற்றன. பழனியம்மாள் மாநகராட்சி பள்ளி முதலிடமும், பிரண்ட்லைன் அகாடமி பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
14 வயதுக்குட்பட்டோர் இரட்டையர் பிரிவில் 25 அணிகள் பங்கேற்றன. லிட்டில் பிளவர் பள்ளி முதலிடமும், பிரைட் பப்ளிக் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
17 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் 22 அணிகள் பங்கேற்றன. லிட்டில் பிளவர் பள்ளி முதலிடமும், வீரபாண்டி அரசு பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
17 வயதுக்குட்பட்டோர் இரட்டையர் பிரிவில் 23 அணிகள் பங்கேற்றன. கதிரவன் பள்ளி முதலிடமும், பிரைட் பப்ளிக் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
19 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் 14 அணிகள் பங்கேற்றன. வேலவன் மெட்ரிக் பள்ளி முதலிடமும், பிரண்ட்லைன் அகாடமி பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
19 வயதுக்குட்பட்டோர் இரட்டையர் பிரிவில் 14 அணிகள் பங்கேற்றன. லிட்டில் பிளவர் பள்ளி முதலிடமும், பிரண்ட்லைன் அகாடமி பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
குறுமைய இணைச்செயலர் செந்தில்குமார், கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் லாரன்ஸ் & முருகன் கண்காணிப்பில் , நடுவர்களாக மணிமன்னன், ஜெயக்குமார், பாலசுப்பிரமணி, ராமராஜ், குமார், சுரேஷ், சந்தோஷ் ஆகியோர் செயல்பட்டனர்.