தூத்துக்குடி, பிரைன்ட் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சரவணகுமார். 28 வயதான இவர், இன்று இரவு புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த நிலையில், 2 பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டி சாய்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வடபாகம் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை நடைபெற்ற இடத்தை தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் ஆய்வு செய்தார். போலீஸார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.