தமிழக சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழுவினர், பொதுக் கணக்குக் குழு தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில், தூத்துக்குடியில் நடைபெறும் அரசு திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகளை இன்று(04.08.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழக சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பல்வேறு குழுக்கள் உள்ளன. அதில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழுவினர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வபெருந்தகை தலைமையில்,
மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் அரசு திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இவர்கள், தூத்துக்குடி அரசு மருத்துவகல்லுரி மருத்துவமனையில், உள்ள நவீன அவசர சிகிச்சை மையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் நவீன பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.