சிறுபான்மை துறை மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர் மக்கள் நல அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடன், குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் சந்திப்பு!


சிறுபான்மை துறை மற்றும் வெளிநாட்டுவாழ் இந்தியர் மக்கள் நல அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களை குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் சார்பாக அதன் நிர்வாகிகள் மக்கள் இன்று நேரில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் பேசினர். 

அதன் பின்னர் குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் சார்பாக அமைச்சரின் சிறப்பான செயல்பாடுகளுக்காக விருது மற்றும் கேடயம் வழங்கினர். 

மேலும்அமைச்சர் அவர்களின் சேவைகள்  தொடர பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்னர். வருகை தந்த அனைவருக்கும் காலை சிற்றுண்டி, தேநீர் ஏற்பாடுகள் செய்து அவர்களுடன் அமர்ந்து அனைவரையும் கௌரவித்தார். 

இந்நிகழ்வில் ஏ ,எம், முபாரக் அலி இந்திய அரசு உணவு பாதுகாப்பு கழகம், முன்னாள் ஆலோசனை கமிட்டி உறுப்பினர் மற்றும் குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் தலைவர் முகமது அலிபாய், செயலாளர் இமாம் அலி, மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post