டெட் தேர்வு தேதி மாற்றம் - நிர்வாகக் காரணங்களினால் தள்ளி வைக்கப்படுவதாக ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவிப்பு


ஆகஸ்ட் 25ம் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் நிர்வாகக் காரணங்களினால் தள்ளி வைக்கப்படுவதாக ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம்  ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்-1  ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினிவழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டது.

தற்பொழுது நிர்வாக காரணங்களினால், தாள் 1-ற்கான தேர்வு செப்டம்பர் 10 முதல் 15 வரை நடத்தப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  மேற்படி கணினிவழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும்.

அனைத்து தேர்வர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம். இது குறித்த அறிவிக்கை, தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச் சட்டு (Admit card) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்" இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Previous Post Next Post