ஊராட்சி மன்ற தலைவர் பட்ட பகலில் வெட்டிப் படுகொலை.! - பாஜக நிர்வாகி உட்பட இருவருக்கு போலீஸ் வலை.!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி  அருகே திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ். வயது 63.இன்று தனது தோட்டத்திற்கு சென்ற பொன்ராஜை மர்மநபர்களால் பட்ட பகலில்  சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.


இது குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி கிழக்கு காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய பாஜக நிர்வாகி உட்பட இரு மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Previous Post Next Post