விலை வாசி உயர்வை ஏற்றிய மத்திய, மாநில அரசை கண்டித்து இந்திய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்!.


அன்றாம் பயன்படுத்தும் மின்சாரம், அரிசி, பால் போன்றவற்றின் ஜிஎஸ்டி விலை உயர்வை மத்திய, மாநில அரசு திரும்ப பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சியின் சார்பாக தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் உள்ள சிதம்பர நகர் பேருந்து நிலையம் அருகில் கண்டன போராட்டம் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக கட்சியின் தென் மண்டல இணை அமைப்பு செயலாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன், தென் மண்டல மாணவரணி அமைப்பாளர் பிரவீன் ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பின்னர், இந்திய ஜனநாயக கட்சியின் தென் மண்டல இணை அமைப்பு செயலாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களான அரிசி, பால் போன்றவைகளின் ஜிஎஸ்டி உயர்வால் மக்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மத்திய அரசுக்கு வன்மையான கண்டனங்கள்,

அதேபோன்று மாநில அரசானது மின்மோட்டார் உயர்வை அறிவித்துள்ளது. ஆனால் மின்சாரம் சீராக கிடைப்பதில்லை அறிவிப்பு இல்லாத மின்சார தடை எந்த நேரத்தில் எப்போது மின்சாரம் கட் ஆகும் என்று தெரியவில்லை, 

முதலில் மின்துறை நிர்வாகத்தை சரிசெய்யுங்கள் அதன் பிறகு மாநில அரசு மின்கட்டண உயர்வை பற்றி பேசுங்கள் என கூறிய அவர், மத்திய மாநில அரசு மக்கள் அன்றாட பயன் மற்றும் மின்சாரம் மற்றும் அரிசி, பால் GST விலை உயர்வை உடனடியாக திரும்ப பெறவேண்டும். இல்லையெனில் மத்திய மாநில அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள் புரட்சி போராட்டம் வெடிக்கும் என கூறினார்.

போராட்டத்தில், மண்டல இணை செயலாளர் கணேஷ் குமார், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகளிர் இணை செயலாளர் லித்யா பிரவீன், மாவட்ட தொழிற் சங்க செயலாளர் பால்துரை, மாவட்ட மாணவரணி செயலாளர் காட்வின், மாவட்ட அமைப்பார் விகேன்ஸ்வரன், மீனவரணி பெணிபிட், திலிப் மற்றும் மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post