சுதந்திர போராட்ட வீரர் ஓண்டிவீரன் நினைவு நாள் - தூத்துக்குடியில் எம்.பி, அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை.!


தூத்துக்குடி சுதந்திர போராட்ட வீரர் ஓண்டிவீரன் 251வது  நினைவு நாளையொட்டி  வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் ரோட்டிலுள்ள கலைஞர் அரங்கில் அலங்கரிக்கப்பட்ட ஓண்டிவீரன் படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கனிமொழி கருணாநிதி எம்.பி, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன்,  ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.


நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் கஸ்தூரிதங்கம், உமாதேவி, மரியதாஸ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, 

மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அருனாதேவி, அந்தோணிகண்ணன், ராமர், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார்,  மேகநாதன், சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், 


மாநகர அணி அமைப்பாளர்கள் முருகஇசக்கி, ஜெயக்கனி, அருண்குமார், துணை அமைப்பாளர்கள் கிறிஸ்டோபர் விஜயராஜ், டைகர் வினோத்,   பால்மாரி, வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சதீஷ்குமார், கீதாசெல்வமாரியப்பன், சுப்பையா, ரவீந்திரன், பாலு, வன்னிராஜ், பொன்னுச்சாமி, 

பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ஜெயசீலி. நாகேஸ்வரி, வைதேகி, தெய்வேந்திரன், கந்தசாமி, ஜான்சிராணி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி, 


முன்னாள் கவுன்சிலர்கள் செல்வகுமார், செந்தில்குமார், ராஜாமணி, மீனாட்சி சுந்தரம், மற்றும் கருணா, பிரபாகர், அல்பட், மணி, லிங்கராஜா, பாஸ்கர், போல்பேட்டை பகுதி துணைச்செயலாளர் ரேவதி, மகளிர் அணி இந்திரா. பெல்லா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post