தமிழ்நாட்டில் தண்டோரா போடுவதற்கு தடை


விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட காலத்தில் தண்டோரா இன்னும் தேவையில்லை - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்.!

சென்னை: தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

 மக்களிடம் முக்கிய செய்திகளை விரைவாக சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருப்பதையும், அதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன். அறிவியல் வளர்ந்து விட்டது; தொழில்நுட்பம் பெருகிவிட்டது.

இச்சூழலில் ‛தண்டோரா' போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை. ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வலம் வரச் செய்வதன் மூலம் மூலை முடுக்குகளில் எல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்த்திட இயலும்.

எனவே தண்டோரா போடக் கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி உள்ளாட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

Previous Post Next Post