கொரோனா அலையில் இருந்து நம்மை பாதுகாக்க, பொருளாதரம் ஏற்றம் பெற முதல்வர் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார் - அமைச்சர் கீதாஜீவன்.!



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 1.35 கோடி மதிப்பீட்டில் ஆர்.டி .பி.ஆர் மற்றும் ஸ்கேன் மையத்தினை  முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அரசு தலைமை மருத்துவமனையில் குத்து விளக்கு ஏற்றி மையத்தினை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கீதாஜீவன்  செய்தியாளரிடம் கூறுகையில் :


கொரோனா அலையில் இருந்து நம்மை பாதுகாக்கவும், பொருளாதரம் ஏற்றம் பெற வேண்டும் எண்ணத்தில் முதல்வர் திட்டங்களை கொண்டு வந்துள்ளார் அத்திட்டங்களில் ஒன்று 1.35 லட்ச ரூபாயில் அமைக்கபட்டு உள்ள ஆர்.டி.பி.ஆர் பரிசோதனை மையம்.

இந்நேரத்தில் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதி மக்களுக்கும் முதல்வர் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், நகர மன்ற தலைவர் கருணாநிதி, நகர மன்ற துணைத் தலைவர் ஆர் எஸ் ரமேஷ், ஒன்றிய செயலாளர் முருகேசன், அரசு தலைமை மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் ஊழியர்கள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post