தூத்துக்குடி தமிழ்வழிச் சாலையில் உள்ள மயானம் பகுதியில் அனைத்து தரப்பினருக்கும் தனித்தனியாக மயானம் இருந்து வருகிறது. அப்பகுதியில் கருவேல மரங்கள் மற்றும் தேவையற்ற பல்வேறு வகையான செடி கொடிகள் படர்ந்த நிலையில் கிடந்தன.
அதில் பல்வேறு மயான நினைவு இடங்கள் பலருக்கும் தெரியாத வகையில் இருந்த அனைத்து செடி கொடி வகைகளையும் அகற்றி ஏற்கனவே அமைக்கப்பட்ட மின் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் எரியப்படாத நிலையில் இருந்து வருகிறது சரி செய்து கொடுக்க வேண்டும் என்று
மாநகராட்சி நிர்வாகத்திற்கு மேயருக்கும் பல்வேறு அரசியல் கட்சிகள் பொதுநல அமைப்புகள் சார்பில் கோரிக்கை வரப்பெற்றதையடுத்து பொது மயானத்தில் இரண்டு ஜேசிபி மூலம் கருவேல மரங்கள் பல்வேறு செடிகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வரும் அனைத்து மயானத்தையும் முழுமையாக சுத்தம் செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைக்கப்பட்டுள்ள மின்கோபுரத்தில் மின்விளக்குகள் முழுமையாக பொருத்தப்பட்டு தேவையற்ற செயல்களில் யாரும் ஈடுபடாத வகையில் இருக்க வேண்டும். என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் அருகிலுள்ள மாநகராட்சி பூங்காவிற்கு தினசரி வந்து செல்லும் மாநகராட்சி பகுதி மக்களில் நடைபயிற்சி விளையாட்டு உள்ளிட்டவைகளையும் பயன்படுத்துபவர்களுக்கு தூய்மையாக இப்பகுதியை வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி பொறியாளர் சரவணன், நகர் நல அலுவலர் அருண்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் சேகர், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மாநகராட்சி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.