திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் அதிகாலையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு... எம்.எல்.ஏ., க.செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் உடனிருந்தனர்.

  திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் அதிகாலையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்போதுஎம்.எல்.ஏ., க.செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் உடனிருந்தனர்.


திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள உழவர் சந்தையில், விவசாயிகள் பல்வேறு குறைகளை தெரிவித்து வந்தார்கள். அதிகாலையில் நேரடியாக உழவர்கள் விற்பனை செய்வதற்காக உழவர் சந்தை அமைக்கப்பட்டு உள்ள நிலையில், வியாபாரிகள், இடைத்தரகர்கள் தொல்லை செய்வதாக புகார்கள் கிளம்பியது. 

இதையடுத்து,  செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று அதிகாலை திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தையில், ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டர் எஸ்.வினீத், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., க.செல்வராஜ், திருப்பூர் மேயர் தினேஷ்குமார், கமிஷனர் கிராந்தி குமார் பாடி, துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர் பத்மநாபன், டி.கே.டி.நாகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

. இந்த ஆய்வின் போது அமைச்சர், ’உழவர் சந்தையின் அடையாள அட்டைகள் சரிபார்க்கப்படுகிறதா? போதுமான வசதிகள் உள்ளதா என்பதை கேட்டறிந்தார். மேலும் உழவர் சந்தை அலுவலர்கள் தினமும் சரியாக பணிக்கு வர வேண்டும், தவறக்கூடாது என்று கண்டிப்புடன் தெரிவித்தார். இது தவிர உழவர்களின் விற்பனை நேரம் சரியாக கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உத்தரவிட்டார். 

இத்துடன் உழவர் சந்தை வளாகத்தில் என்னென்ன மேம்பாட்டு திட்டங்கள் செய்ய வேண்டும் என்பதையும். வியாபாரிகள் குறைகளையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கேட்டறிந்தார். 
Previous Post Next Post