தூத்துக்குடியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி - அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.!


தமிழக அரசு போதை பொருள் விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நேற்று சென்னை தலைமை செயலகத்தில் வைத்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்த நிலையில்

இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். 

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் முன்னிலையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர் 

ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணிக்கு முன்பாக தப்பாட்டம் கலைநிகழ்ச்சியும் சிறுவர் சிறுமிகளின் சிலம்பாட்டத்துடன் சென்ற பேரணியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக சென்று மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் பேரணி நிறைவு பெற்றது. 


இப்பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணப்பிராண், மாவட்ட கல்வி அலுவலர் பாலதாண்டாயுதம், மாவட்ட உணவு வழங்கல் பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன், சுகாதரார பணிகள் இணை இயக்குநர் பொற்செல்வன், 

மருத்துவ கல்லூரி இணை இயக்குநர் பொன்இசக்கி, மருத்துவ கல்லூரி (பொறுப்பு) டீன் ராஜேந்திரன்,  தாசில்தார் செல்வகுமார், கோட்டாச்சியர் சிவசுப்பிரமணியன், 

மாநில திமுக மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம், மற்றும் மணி, செந்தில்குமார், அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post