தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் முத்து தலைமையில் கோவில்பட்டி உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று (02.08.2022) கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோரம்பள்ளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது,
செட்டிகுறிச்சி ராமதாஸ் நகர் காலனி பகுதியை சேர்ந்த சண்முகையா மகன் முருகன் (32) மற்றும் செட்டிக்குறிச்சி ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் காளிராஜ் (33) ஆகிய 2 பேரும்
மேற்படி முருகனின் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே போலீசார் எதிரிகளான முருகன் மற்றும் காளிராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 41,760/- மதிப்புள்ள 85 கிலோ புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து கயத்தார் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட காளிராஜ் மீது ஏற்கனவே கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ளது குறிப்பிடதக்கது.