ஆசிய அளவில் 7 நாடுகள் கலந்துகொள்ளக்கூடிய ஓபன் ஆசியா 2022 பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆகஸ்ட் 14ல் ராமநாதபுரமத்தில் நடைபெறவுள்ளது.


இராமநாதபுரம் ஆக.07. 

தமிழகத்தில் முதல் முறையாக, ராமநாதபுரத்தில்,  ஓபன் ஆசியா 2022 பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆகஸ்ட் 14ல் நடைபெறவுள்ளது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள தனியார் ஹாலில் ராமநாதபுரம் மாவட்ட பிட்னஸ் பெடரேஷன் சார்பில் நடைபெற்றது, 

இதில் உலக பாடி பில்டிங் பெடரேஷன் தலைவர் சீனி சிக்கந்தர் பாஷா செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, 

தமிழகத்தில் முதல் முறையாக ராமநாதபுரத்தில் 'ஓபன் ஆசியா 2022' பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 14 அன்று நடைபெறவுள்ளது,  

இதில் இந்தியா, இலங்கை,  சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், சவுதி அரேபியா உள்ளிட்ட 7 நாடு களில் இருந்து சுமார் 150 வீரர்கள் பங்கேற்க உள்ளனர், ராமநாதபுரம் மாவட்ட பிட்னஸ் பெடரேஷன் சார்பில் இந்த போட்டி நடத்தப் படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மிஸ்டர் ஒலிம்பியா போன்ற வடிவமைப்பு கொண்ட  சுழற்கோப்பை நினைவு பரிசும் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது.

வரும் ஆகஸ்ட் 14 அன்று காலை 8:00 மணிக்கு துவங்கி 11:00 மணி வரை நடைபெறவுள்ளது, இதில் ஜூனியர் 2 பிரிவுகளிலும், சீனியர் 6 பிரிவுகளிலும், 40 வயதுக்கு மேல், 50 வயதிற்கு மேல் என இரு பிரிவுகளாகவும்,  ஆண்கள், பெண்கள் என இப்போட்டிகள் நடக்கவுள்ளது. இதில் ஒட்டுமொத்த சாம்பியனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப் படுகிறது. 

இரண்டாவது பரிசாக10 ஆயிரம், மேலும் ஒவ்வொரு பிரிவிலும் 15 ஆயிரம், 10 ஆயிரம் எனவும் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது இடங்களில் வெற்றி பெறவுள்ளவர்களுக்கு தலா 5000 ரூபாய் வழங்கப் படவுள்ளதாக தெரிவித்தார். இந்நிகழ்வில் உலக பிட்னஸ் பெடரேஷன் செயலாளர் ஜெகநாதன், உலக பிட்னஸ் பெடரேஷன் பொருளாளர் தனசேகரன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஷைனி ஆகியோர் உடனிருந்தனர்.

Previous Post Next Post