ராணிப்பேட்டை மாவட்டம் வி.சி.மோட்டூர் அருகே செயல்பட்டு வரும் இரு தனியார் தோல் தொழிற்சாலைகளில் காலைமுதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை வேலூர் புதுச்சேரி உட்பட தமிழகம் முழுவதும் 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகிறது.
இரண்டு தோல் நிறுவனங்களுக்கு சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள்.
சென்னை ராமாபுரம், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள இரண்டு நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
அதே போன்று வேலூர் ,புதுச்சேரி ஆகிய இடங்களில் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் 60 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் பெரியமேடு பகுதியிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.