50% மானியத்தில் நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்.!


2022-2023- ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறு அளவிலான (250 கோழிகள்/அலகு) 100 நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50மூ மானியத்தில் நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

இத்திட்டத்தில் பயன் பெற விருப்பமுள்ள தொழில் முனைவோர் 250 நாட்டுக் கோழிகள் வளர்த்திட 625 சதுரஅடி கோழிகள் தங்கும் கூரை வசதி உடையவராக இருத்தல் வேண்டும். இந்தப் பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் பயனாளிக்கு 250 நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கான விலையில் 50 சதவீதம் கோழிக் கொட்டகை கட்டுமான செலவுக்கான விலையில் 50 சதவீதம் கோழி தீவனத்திற்கான விலையில் 50 சதவீதம் மற்றும் குஞ்சு பொரிப்பு கருவிக்கான விலையில் 50 சதவீதம் ஆக மொத்தம் ரூ.1,66,875/- மானியமாக வழங்கப்படும். 

இத்திட்டத்தில் 30% SC/ST பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.   விண்ணப்பிக்கும் பயனாளி முந்தைய ஆண்டுகளுக்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயன் பெற்றவராக இருத்தல் கூடாது.

தகுதி வாய்ந்த திட்டம் செயல்படுத்திட விருப்பம் உள்ள பயனாளிகள் அவர்களது கிராமத்தில் அமைந்துள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி 20.08.2022-க்குள் விண்ணப்பம் அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.


Previous Post Next Post