தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரம் தங்கத்தேர் மாதா கெபியின் 40வது ஆண்டு திருவிழா - ஆகஸ்ட் 29ல் தொடங்கி , செப்டம்பர் 08 வரையில் நடைபெறுகிறது.!


தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ்.எஸ்.மாணிக்கபுரம் பகுதியில் சர்வமதத்தினரும் நம்பிக்கையுடன் வணங்கி வருகின்ற அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா தங்கத்தேர் கெபின் 40வது ஆண்டு திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 29/2022 ல், பங்குதந்தை அருள்திரு. ஆன்றனி புருனோ தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கிடவுள்ளது. இத்திருவிழா சாதி மத அரசியல் வேறுபாடின்றி 

இப்பகுதியை சுற்றியுள்ள அனைத்து தரப்பு மக்களும் ஒன்றினைந்து, இவ்விழாவை வெகு விமர்சையாக கொண்டாடி வருவதால் இவ்விழா இப்பகுதியின் சமத்துவ திருவிழாவாகவும் அழைக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகின்ற தங்கத்தேர் மாதா கெபியின் இந்த சமத்துவ திருவிழாவில் ஆகஸ்ட் 29ல் நடைபெறும் கொடியேற்ற  விழா மற்றும் செப்டம்பர் 06ம் தேதி நடைபெறுகின்ற அன்னையின் திருவுருவ தேர்பவனி ஊர் சுற்றி வருதலும் ,  செப்டம்பர் 07ம் தேதி  சுமார் 5000 க்கு 


மேற்பட்ட மக்கள் பங்கு பெறுகின்ற (அன்னதானம்) அசன  விருந்தும் , செப்டம்பர் 08ம் தேதி பங்குதந்தை அருள்திரு. ஆன்றனி புருனோ தலைமையில் நடைபெறுகின்ற திருவிழா திருப்பலியும் இவ்விழாவின் சிறப்பு நிகழ்வுகளாக அனைவராலும்  கொண்டாடப்பட்டு வருகிறது. 

மேலும்  இவ்விழாவை தங்கத்தேர் மாதா கெபி கமிட்டியுடன் , புனித வேளாங்கண்ணி மாதா அன்பிய மக்களும் , புனித பூண்டி மாதா அன்பிய மக்களும் திருவிழா நிகழ்வுகளை கவனித்து வருகின்றனர்.

Previous Post Next Post