தூத்துக்குடி; நடுக்கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணி 3வது நாளாக தொடர்கிறது.!


திருச்செந்தூர் அருகே நடுகடலில் காணாமல் போன இரண்டு மீனவர்களை தேடும் பணி இரண்டு ரோந்து கப்பல்கள் மூலமாக மூன்றாவது நாளாக இன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலி நகர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த நான்கு நாட்களுக்கு முன் மீன்பிடித்து கரைக்கு திரும்பும் போது திருச்செந்தூரில் இருந்து சுமார் 22 கடல் மேல் தொலைவில் கடலில் ஏற்பட்ட சீற்றத்தின் காரணமாக படகு கவிழ்ந்தது. 

படகிலிருந்த நான்கு மீனவர்களில் நடுக்கடலில் தத்தளித்த இரண்டு பேரை மற்றொரு படகில் சென்ற மீனவர்கள் மீட்டனர். மேலும் இரண்டு பேரை தேடும் பணி விசைப்படகுகள் மற்றும் 10 பைபர் படகு மூலமாக தேடும் பணி நடைபெற்றது. 


அதில் மீனவர்கள் மீட்கப்படாத நிலையில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஆதேஷ், அதிராஜ் ஆகிய இரண்டு ரோந்துக் கப்பல்கள் மூலமாகவும் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலமாகவும் தேடும்பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மீனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post