திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது வெள்ளகோவில்.
இதற்கு அருகே உள்ள அத்தாம்பாளையத்தை சேரந்தவர் கனக சம்பத். இவர் ஒருுி விவசாயி. இந்த நிலையில் கனகசம்பத்துக்கும் அவரது மனைவி ரேவதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இன்றும் அதேபோல தகராறு ஏற்பட்ட இருவரும் சண்டை போட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த பேபி (எ) ரேவதி(42) அவர்களது குழந்தைகள் ஹட்சிதா (13), கலைவேந்தன் (8) ஆகிய இருவரையும் அடித்து கொலை செய்து உள்ளார்.
மேலும் ரேவதியும் விஷமருந்தி தற்கொலை செய்ய முயன்று இருக்கிறார்.
இதில் குழந்தைகள் இருவரும் இறந்துவிட்டனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் பேபி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
வெள்ளகோவில் காவல்துறையினர் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.