தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் - 20 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!


தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணைமேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளுக்கு தேவையானது குறித்து பேசினார்கள். தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் 

தூத்துக்குடி மாநகர பகுதியில் சில இடங்களில் 3 நாட்களும் அதே போல் இரண்டு ஒன்று என நாட்களில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அனைத்து பகுதிகளுக்கும் தினசரி தண்ணீர் கொடுக்க வேண்டும். என்ற இலக்கோடு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதே போல் தமிழக முதல்வர்  தூத்துக்குடி பகுதியில் கடந்த காலத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் அந்த பகுதிகளில் வரும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் பாதிப்படையாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி இன்னும் ஓரு மாதகாலத்திற்குள் மழை காலம் ஆரம்பித்து விடும் விரைவாக கால்வாய் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மாநகர வளர்ச்சிக்கு பொதுமக்கள் நலன் கருதி எடுக்கும் அனைத்து வளர்ச்சி பணிகளுக்கும் அனைவரும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றார். 


பல்வேறு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஆணையர் சாருஸ்ரீ, செயற்பொறியாளா ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், ரங்கநாதன், உதவி ஆணையாளர் சேகர், சுகாதர அலுவலர் அருண்குமார், சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ், உள்ளிட்டோர் பதிலளித்தனர்.

சாதாரண கூட்டத்தில் தூத்துக்குடி மாநகரில் காற்று மாசு படுவதையும் அதை தடுப்பது கட்டுபடுத்துவது உள்ளிட்ட 16 தீர்மானங்களும் அவசர கூட்டத்தில் 4 தீர்மானங்களும் என 

தூத்துக்குடி மாநகர் முழுவதும் பொதுமக்கள் வளர்க்கும் மாடுகளால் பல்வேறு விபத்துகளும் இடையூறுகளும் ஏற்படுகின்றன. அதை தடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்தவர்களும் 

பொதுநல அமைப்பினரும் ஊடகத்துறையினரும் விடுத்துள்ள கோரிக்கையை கருத்தில் கொண்டு மாடுகள் பிடிக்கப்பட்டு மாநகராட்சி காசோலை பகுதியில் அடைக்கப்படுகின்றன. 

அதற்கு விதிக்கப்படும் அபராத தொகையை கட்டி மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை மீட்டு செல்கின்றனர் மீண்டும் அதே போல் சம்பவம் தொடர்வதால் அதை தடுக்கும் வகையில் கூடுதல் அபராத தொகை விதிப்பது உள்பட 16 தீர்மானங்களும்

முதலமைச்சர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் அறிவித்திருப்பதையொட்டி நான்கு மண்டலங்களிலும் காலை உணவு திட்டத்தை முறைப்படுத்தி செயல்படுத்துவது உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் என மொத்தம் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, பால குருசாமி, உதவி ஆணையர்கள்  தனசிங், காந்திமதி, கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், சரவணக்குமார், விஜயகுமார், ராமர், கண்ணன், ஜாக்குலின்ஜெயா, வைதேகி, முத்துவேல், தனலட்சுமி, பவானி மார்ஷல், 

மெட்டில்டா, மரியகீதா, பாப்பாத்தி, சரண்யா, தெய்வேந்திரன், கந்தசாமி, சுயம்பு, பச்சிராஜ், ராஜதுரை, ரெங்கசாமி, மும்தாஜ், முத்துமாரி, ஜான், ஜாண்சிராணி, ராமுத்தம்மாள், கனகராஜ், ரிக்டா, பேபிஏஞ்சலின், கற்பககனி, நாகேஸ்வரி, ஜெயசீலி, எடின்டா, பொன்னப்பன், சோமசுந்தரி, 

அதிமுக கவுன்சிலர்கள் வக்கீல் மந்திரமூர்த்தி, விஜயலட்சுமி, மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post