சிறு குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.167.58 கோடி அரசு நிதி உதவியுடன் திட்டங்கள் திருப்பூரில் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.!


தமிழக அரசின் சார்பில் தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற தலைப்பில் சிறு குறு தொழில்துறை மண்டல மாநாடு திருமுருகன்பூண்டி பாப்பிஸ் விஸ்டா ஹோட்டலில் இன்று காலை நடைபெறறது. 

இதில் கலந்துகொண்டு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இதற்காக திருப்பூர் 60 அடி ரோடு பகுதியில் இருந்து பூண்டியில் உள்ள பாப்பீஸ் ஹோட்டல் வரை வந்த அவருக்கு திருப்பூர் தெற்கு எம்எல்ஏ க.செல்வராஜ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விழா அரங்கில் மு.க.ஸ்டாலின போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.


சிறு குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.167.58 கோடி அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட இருக்கும் பல திட்டங்களை தொடங்கி வைத்தும் , பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் , தொழில்முனைவோர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் முக.ஸ்டாலின் வழங்கினார். 


தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தின் ரூ.100 கோடி மதிப்பிலான தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம், தமிழ்நாடு வர்த்தக வரவுகள் தள்ளுபடி செயல்முறை தளம், ரூ.15 கோடியில் பின்னலாடை குழுமத்திற்கான பொது வசதி மையம் , ஆகிய திட்டங்களை முதல் அமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

குறிச்சி தொழிற்பேட்டையில் 22 கோடியில் தொழிலாளர் தங்கும் விடுதி, ரூ.18.13 கோடியில் 42.42 ஏக்கர் பரப்பளவில் தனியார் தொழிற்பேட்டை, சேலத்தில் ரூ.24.55 கோடியில் வெள்ளி கொலுசு பொது வசதி மையம் ஆகிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அருண் ராய் வரவேற்று பேசினார். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., க.செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் உள்பட திரலானவர்கள் பங்கேற்றார்கள். முன்னதாக விழா அரங்கில் அமைக்கப்பட்டிருந்த சிறு குறு தொழில்துறை நிறுவனங்கள் குறித்த கண்காட்சியையும், புகைப்படக் கண்காட்சியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

Previous Post Next Post