தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ் தலைமையில்
தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க உத்தரவிட்டார்.
சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டு பிடித்து, சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்து அவற்றை பறிமுதல் செய்து ஏற்கனவே கடந்த 15.10.2020 அன்று 102 செல்போன்களும்,
09.12.2020 அன்று 60 செல்போன்களும், 12.02.2021 அன்று 61 செல்போன்களும், 02.07.2021 அன்று 60 செல்போன்களும் 24.08.2021 அன்று 70 செல்போன்களும், 08.12.2021 அன்று 100 செல்போன்களும் மற்றும் 22.03.2022 அன்று 100 செல்போன்களும் என மொத்தம் 553 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு இதுவரை சைபர் கிரைம் குற்ற பிரிவு தனிப்டையினர் இதனை கண்காணித்து துரிதமாக செயல்பட்டு ரூபாய் 12,70,000/- மதிப்புள்ள 127 செல்போன்களை கண்டு பிடித்து, அவைகளை பறிமுதல் செய்தனர்
அவற்றை இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஒப்படைத்தார்.
மேலும் காணாமல் போன 127 செல்போன்களை தொழில்நுட்ப ரீதியாக கண்டுபிடித்த சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ் தலைமையிலான சைபர் குற்ற பிரிவு போலீசாரை பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பிரகாஷ் பாபு,
மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பிரேமானந்தன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.