மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசிய இசையமைப்பாளர் இளையராஜா நியமன எம்.பி.யாக தேர்வு - பிரதமர் மோடி வாழ்த்து.!

 

இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி. உஷா ஆகியோர் மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நியமன எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா ஆகிய இருவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரால் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறார்கள். கலை விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில், இசைஞானி இளையராஜா, தடகள வீராங்கணை பி.டி.உஷா, திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் (இயக்குநர் ராஜமவுலியின் தந்தை) சமூக செயற்பாட்டாளர் வீரேந்திர ஹெக்டே ஆகியோரை மாநிலங்களவைக்கு நியமன எம்.பி.க்களாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்துள்ளார்.

இசைஞானி இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையானது. இது குறித்து பாஜகவிடம் ஏதோ ஆதாயம் அடைய இளையராஜா அவ்வாறு புகழ்ந்ததாக விமர்சனம் எழுந்த நிலையில் இன்று பாஜக அவரை நியமன எம் பி யாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post