கேரளத்தில் நீட் தேர்வின்போது மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றச்சொன்ன சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஏற்கெனவே அங்கு பரிசோதனையில் ஈடுபட்ட தேசிய தேர்வு முகமையின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 3 பெண்கள், அயூர் தனியார் கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் 2 பெண்கள் என 5 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, தேர்வு பார்வையாளர் டாக்டர் ஷம்நாத் மற்றும் தேர்வு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரிஜி மைய குரியன் ஐசக் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.