கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்துதலுக்கான பயிற்சி முகாம்.!


தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பெல் ஹோட்டலில் மாவட்டக் குழந்தை பாதுகாப்பு அலகின் கீழ் கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்துதலுக்கான பயிற்சி முகாம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில் இன்று துவக்கி வைத்தனர். 

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்ததாவது:

அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை உறுதி செய்ய ஒரு திட்டம் உள்ளது. பல்வேறு பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. 


ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சர் அவர்களின் நோக்கமாகும்.  பஞ்சாயத்து தலைவர்கள் தங்களுடைய பணிகளுடன் இதனையும் சேர்த்து மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

குழந்தைகளை பார்க்க வேண்டிய முக்கியமான கடமை பெற்றோர்களுக்கு இருக்கிறது. குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். பள்ளிக்கு சென்று குழந்தைகளின் நிலை குறித்து கேட்டறிய வேண்டும். 


குழந்தைகள் எங்கு போகிறார்கள், யாருடன் விளையாடுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். தற்போது 1098 எண்ணுக்கு அதிக புகார்கள் வருகிறது. குழந்தைகளை கட்டுபாடுடன் வளர்க்க வேண்டும். தொடர்ச்சியான சமுதாய மாற்றம் ஏற்பட்டால்தான் வெற்றியடைய முடியும்

பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வழிகாட்டுதலாக இருக்க வேண்டும். வளரிளம் பருவத்தில் கவனமாக வளர்க்க வேண்டும். உயர்கல்வி உதவித்தொகை கேட்டு 2.81 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 

சிபிஎஸ்இ தேர்வு முடிவு வந்தால் இன்னும் அதிகமாகும். யுனிசெப் நிறுவனம் நமது பகுதியில் சிறார்கள் குற்றசெயல்கள் அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. நமது மாவட்டத்தில் 21ம் தேதி யுனிசெப், மாவட்ட நிர்வாகம், சமூக நலத்துறை இணைந்து ஒரு ஆண்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என தெரிவித்தார். 

குழந்தைகள் பாதுகாப்பு முழுவதும் எல்லா மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்,  மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ்,   முன்னிலையில் கையேடு விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டார்கள். 

மாவட்டக் குழந்தைப் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் பயிற்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுவின் முக்கியத்துவம் குறித்து பேசினார். குழந்தைகளைப் புரிந்து கொள்வோம் - உரிமைக் கண்ணோட்டத்தில் என்ற தலைப்பில் சென்னை, தோழமை இயக்குநர் தேவநேயன் பேசினார். 

குழந்தைகள் மீதான வன்முறையின் வடிவங்கள் / குழந்தை பாதுகாப்புக்கான சட்டங்கள் மற்றும் அமைப்புகள் குறித்து சென்னை, வழக்கறிஞர்  தென்பாண்டியன் பேசினார். குழந்தை திருமணமும் குழந்தை உரிமை மீறலும் என்ற தலைப்பில் தூத்துக்குடி, மாவட்ட சமூக நல அலுவர் ரதி தேவி சென்னை, மாநில பள்ளிச் சாராக் கருவூலம், குழந்தை பாதுகாப்பு அலுவலர் செல்வி.பூரணி , சென்னை மாநில பள்ளிச் சாராக் கருவூலம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சரண்யா சதீஷ் ஆகியோர் பேசினார்கள். 

குழந்தை நேய மாவட்டத்தை உருவாக்க உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு குறித்து குழந்தை உரிமை செயற்பாட்டாளர் கணேசன் பேசினார். 

இப்பயிற்சியில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், உடன்குடி, ஆழ்வார்திருநகரி, கருங்குளம் ஆகிய 7 வட்டாரங்களை சார்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். சென்னை, தோழமை, ஒருங்கிணைப்பாளர் பிரபாகர் நன்றியுரையாற்றினார்

Previous Post Next Post