தமிழகம் முழுவதும் இன்று திமுக அரசை கண்டித்து மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின் பேரில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இராமநாதபுரத்தில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மனசாட்சி இல்லாத மக்கள் விரோத ஸ்டாலின் திமுக அரசு என்ற தலைப்பில் திமுக அரசைக் கண்டித்து மாவட்ட தலைவர் இ.எம்.டி. கதிரவன் தலைமையில், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மனசாட்சி இல்லாத மக்கள் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்ற தலைப்பில் திமுக அரசைக் கண்டித்து இராமநாதபுரம்
அரண்மனை முன்பாக, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்
இ.எம்.டி. கதிரவன் தலைமையில், மாநில பொது செயலாளர் பொன்.பால கணபதி, மாவட்ட பொருளாளர் தரணி முருகேசன், மாவட்ட பட்டியலின தலைவர் ரமேஷ்கண்ணா ஆகியோர் முன்னிலையில் ,
மனசாட்சி இல்லாத மக்கள் விரோத திமுக ஸ்டாலின் அரசை கண்டித்தும், கட்டுப்படுத்த முடியாத கஞ்சா விற்பனையும், லாக்கப் மரணங்களும், அத்துமீறும் பாலியல் தொல்லைகளும், எண்ணிக்கை இல்லா கொலை குற்றங்களும், மத்திய அரசு திட்டத்தில் மாநில அரசின் ஸ்டிக்கர் விளம்பரமும் ,தொடர் மின்வெட்டு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்தும் ,பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மீதான தொடர் பொய் வழக்குகள் போடப்பட்டு வருவதை கண்டித்தும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கண்டன உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தில் மாநில, மாவட்ட, நகர் மற்றும் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பாஜக உறுப்பினர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டு உண்ணாவிரத பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி மற்றும் படம் : பாலமுருகன்