2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. 30 மொழிகளில் இருந்து மொத்தம் 305 படங்கள் தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டன.
இன்று அறிவிக்கப்பட்ட தேசிய விருதில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக சூர்யாவும், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அதே படத்தில் அபர்ணா பாலமுரளியும் பெற்றிருக்கின்றனர்.
சிறந்த படமாக சூரரைப் போற்று தேர்வாகியுள்ளது. அதுமட்டுமின்றி அப்படத்துக்கு இசையமைத்ததால் ஜிவி பிரகாஷும் சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.
இதுபோக, ஸ்பெஷல் ஜூரி விருதை வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் பெற்றது. அதேபோல், சிறந்த துணை நடிகைக்கான விருதை அந்தப் படத்தில் நடித்த லட்சுமி பெற்றிருக்கிறார். சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தும் தேசிய விருது வென்றுள்ளார்.