தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சித் துறை திட்ட பணிகள் - அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு.!


தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர் 

அந்த வகையில் ஸ்ரீவைகுண்டம் அடுத்துள்ள நட்டாத்தி கிராமத்தில் பணிகள் நிறைவு பெற்ற நூலகம் அங்கன்வாடி மையம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பாக கட்டிக் கொடுக்கப்பட்டு வரும் வீடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் 

இதைத்தொடர்ந்து வாலவல்லான் கிராமத்தில் ஊராட்சி மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நர்சரி மகளிர் திட்டம் மூலமாக கொற்கை மகளிர் சுய உதவி குழு பெண்கள் சார்பாக பொம்மைகள் தயாரிப்பு பணிகளையும் அமைச்சர்கள் பெரிய கருப்பன், மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர்  பார்வையிட்டனர்.


தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய  நிதியில் முக்காணியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது இந்த புதிய கட்டிடத்தை அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்து

மேல் ஆத்தூர் பகுதியில் ஆகாயத்தாமரையிலிருந்து மகளிர் சுய உதவி குழு பெண்கள் மூலமாக மதிப்பு கூட்டு பொருள்கள் செய்யும் மையத்தை பார்வையிட்ட அமைச்சர்கள் மதிப்பு கூட்டுப் பொருட்கள் செய்வது குறித்து கேட்டறிந்தனர் 


தொடர்ந்து திருச்செந்தூர் அருகே உள்ள சண்முகபுரம் முதல் ராணி மகாராஜாபுரம் வரை ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அமைக்கப்பட்டு வரும் கிராம மேம்பாட்டு சாலை பணி ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் சாலையின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன் 

"கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு பணிகளும் நடைபெறாத நிலையில் தற்போது அனைத்து பணிகளும் நடைபெறுவதற்கு வேண்டிய அனைத்து விதமான நடவடிக்கையையும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார் 

அந்த வகையில் தான் ஊரக உள்ளாட்சித் துறை மூலமாக நடைபெறக்கூடிய பணிகளை தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது மேலும் மகளிர் சுய உதவி குழுக்களை கொண்டு வந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் 


என்ற முறையில் பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் மேற்கொண்டு வருகிறார் இதன் மூலம் பெண்கள் பொருளாதார நிலையில் உயர்ந்து வருகின்றனர் மேலும் இந்தியாவிற்காக பல்வேறு திட்டங்களை முதன்மை திட்டமாக தமிழகம் தான் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தான் பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது தமிழகத்தில் முன்பே துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது ஆனால் மத்திய அரசு இன்று முதல் தான் பிளாஸ்டிக் ஒழிப்பு என்பதை கொண்டு வந்துள்ளது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், ஊரக உள்ளாட்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது, ஊரக உள்ளாட்சித் துறை நிர்வாக இயக்குனர் திவ்யதர்ஷினி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கூடுதல் ஆட்சியர் சரவணன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் புகாரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post