சொத்து வரி மற்றும் மின்கட்டண உயர்வு கண்டித்து தூத்துக்குடியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்.!


வீட்டு வரி, மின் கட்டண உயர்வு, சொத்து வரி, குடிநீர் இணைப்பு கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு  என பொதுமக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஜூலை 25ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என  அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. 

அதன்படி இன்று தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பாளை ரோடு வி.வி.டி சிக்னல் அருகே முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா திமுக அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தியவாறு தமிழக அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

தொடர்ந்து கண்டன  உரையாற்றிய தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர்  எஸ்.பி சண்முகநாதன் 


தூத்துக்குடியில் தற்போது  நடைபெற்று வரும் 1500 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டம் உட்பட பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தது அதிமுகதான். திமுக ஆட்சியில் மக்களுக்கான எந்த ஒரு நல்ல திட்டங்களும் கொண்டு வரவில்லை 

அதிமுக செயல்படுத்திய திட்டத்தை இன்று ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைக்கிறார்கள். மக்களுக்கான பல நல்ல திட்டங்களை தந்தது அதிமுக ஆட்சிதான் ஆனால் இன்று திமுகவின் ஆட்சி விலைவாசி உயர்வு,மின் கட்டண உயர்வு என தமிழக மக்களை வாட்டி வதைக்கிறது 

இதனை விரைவில் மக்கள் தூக்கிஎறிவார்கள் மீண்டும் விரைவில் அதிமுகவின் நல்லாட்சி மலரும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் சி.த.செல்லபாண்டியன் சின்னதுரை, மாவட்ட அவை தலைவர் திருப்பாற்கடல், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட துணைச்செயலாளர் சந்தனம், இணைச்செயலாளர் செரினா பாக்கியராஜ், மாநில மருத்துவ அணி துணைசெயலாளர் ராஜசேகர், 

வக்கீல் அணிசெயலாளர் சேகர்,  துணைச் செயலாளர் சரவணபெருமாள், முனியசாமி, பிரபு, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு,  சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்ஜெபக்குமார், மாணவரணி செயலாளர் பில்லா விக்ணேஷ், 



முன்னாள் நகரமன்ற தலைவர் ஹென்றி தாமஸ், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ் மற்றும் ஜோஸ்வா அன்பு பாலன், 

இலக்கிய அணி செயலாளர் நடராஜன், தொழிற்சங்க செயலாளர் ராஜா, ஓன்றிய செயலாளர்கள் ராஜ்நாராயணன், அழகேசன், காசிராஜன், பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், முருகன், சேவியர், நட்டாளமுத்து, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால்,

பகுதி இளைஞர் அணி செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் ரமேஷ்கிருஷ்ணன், அதிமுக எதிர்க்கட்சி கொறடா மந்திரமூர்த்தி, கவுன்சிலர்கள் பத்மாவதி,வெற்றிச்செல்வன், வட்ட செயலாளர் சொக்கலிங்கம், உலகநாத பெருமாள்,முருகன், அருண்குமார், மற்றும் நிர்வாகிகள் பாலாஜெயம் சகாயராஜ், சாம்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post