மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவி கோரிக்கையை ஏற்று பேவர் பிளாக் சாலை அமைத்து கொடுத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூர் வி.பி.சித்தன்நகரைச் சேர்ந்த பெருமாள்சாமி என்பவரது மகள் தங்கமாரியம்மாள். மாற்றுத்திறனாளியான இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். 

தங்கமாரியம்மாள் இல்லத்திற்கு செல்வதற்கு சரியான சாலை இல்லாத காரணத்தினால் செல்லமுடியமால் மிகவும் சிரமப்பட்டு சென்று வந்ததார். இந்நிலையில் கடந்த மாதம் 27ந்தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தங்கமாரியம்மாள், 


தங்களது தெருவில் உள்ள சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார். மனுவினை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மருத்துவர்.கி.செந்தில்ராஜ், சாலையை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தது மட்டுமின்றி, 

ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர். இதையெடுத்து அப்பகுதியில் புதியதாக பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சரியான சாலை வசதி இல்லமால் அவதிப்பட்டு வந்த தங்கமாரியம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தங்களது கோரிக்கை மனுவினை ஏற்று கனிவுடன் பரீசிலனை செய்து நடவடிக்கை எடுத்து பேவர் பிளாக் சாலை அமைத்து கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு தங்கமாரியம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினை தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post