கந்துவட்டி பிரச்சனை : கோவில்பட்டி மகளிர் காவல் நிலையம் முன்பு வழக்கறிஞர் தீக்குளிக்க முயற்சி.!*


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விருதுநகரைச் சேர்ந்த காவலர் நாராயணசாமி என்பவர் தனது மனைவி சிவசக்தி என்பவர் மூலம் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வருவதாகவும், 


அவர் மனைவி மீது கந்து வட்டி புகார் கொடுத்தால் , புகார் கொடுத்தவர் மீது, அவர்களுக்கு ஆஜராகும் வழக்கறிஞர் மீது காவலர் நாராயணசாமி குண்டர்களை வைத்து தாக்குவதாகவும், 



நாராயணசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகேஸ்வரி, வழக்கறிஞர் அய்யலுசாமி ஆகியோர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தனர். 

அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மகளிர் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Previous Post Next Post