தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் காண்காணிப்பாளர் டாக்டர். பாலாஜி சரவணன் இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் வழங்கப்பட்ட “i9 CDR Analyzer” மென்பொருளின் செயல்பாடுகள் மற்றும் CDR (Call Detail Record) மூலம் குற்றவாளிகளின் விபரங்கள் பகுப்பாய்வு செய்யும் முறை ஆகியவற்றை பார்வையிட்டு, குற்றதடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு செயல்பாடுகள் குறித்து சைபர் கிரைம் காவல் நிலைய அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி சைபர் கிரைம் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேசியஸ், தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான
குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பிரகாஷ்பாபு, சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் சிவசங்கரன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் சைபர் கிரைம் காவல் நிலைய போலீசார் உடனிருந்தனர்.