தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் காச நோய் குறித்து கண்டறியும் வகையில் அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று காசநோய் குறித்த பரிசோதனை செய்வதற்காக காச நோய் கண்டறியும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை தமிழக அரசு வழங்கி உள்ளது
இந்த வாகன செயல்பாடுகளை பாராளுமன்ற திமுக குழு துணை தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கொடி அசைத்து துவங்கி வைத்தனர்.
தொடர்ந்து மாவட்ட முழுவதும் செல்லும் இந்த நடமாடும் காச நோய் பரிசோதனை எக்ஸ்ரே வாகனம் காச நோயாளிகளை எக்ஸ்ரே எடுத்து அதற்கான உரிய சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காசநோய் துறை அலுவலர்கள் தெரித்தனர்
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ,மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனீட்டா செல்வராஜ், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர் நாகேஸ்வரி, தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ் மார்ஷலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.