ஏற்காடு: சட்ட விரோதமாக மரங்கள் வெட்டிய வனத்துறை அலுவலர் பணியிடைநீக்கம்!

 

File Photo

ஏற்காடு வனப்பகுதிக்குள் சட்ட விரோதமாக மரங்களை வெட்ட உடந்தையாக இருந்த வனத்துறை அலுவலரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

மலைக்கிராம மக்கள் சட்ட விரோதமாக வனப்பகுதியில் சாலை அமைக்க முயன்றதும், அதற்காக அனுமதியின்றி 200 மரங்களை வெட்டி வீழ்த்தி இருப்பதும் தெரியவந்தது. வனக்காப்பாளர் குமார் என்பவர், மலைக்கிராம மக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மரங்களை வெட்ட அனுமதித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், வனச்சரகர் பரசுராமமூர்த்தி, வனவர் சென்னகிருஷ்ணன் ஆகியோர் மரங்கள் வெட்டப்படுவது தெரிந்து இருந்தும் அதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்காமல் இருந்துள்ளனர். இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி அவர்கள் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. 

இந்த சம்பவம் வனத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post