மின் கட்டண உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.!


பொதுமக்களை பாதிக்கும் வகையில் மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர் அதன் அடிப்படையில் தூத்துக்குடியில்  பாஜக சார்பில்  மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிராகவும் திமுகவின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. சூரிய மின்சாரம் கிடைக்கும் போது மின் கட்டணம் உயர்வு எதற்கு 

காற்றாலை மின்சாரம் கிடைக்கும் போது மின் கட்டண உயர்வு எதற்கு மின்சார துறையில் ஊழல் செய்வது திமுக பணியை ஏற்பது மக்களா என்பது போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி, பாஜக ஓ.பி.சி., அணி மாநில செயலாளர் விவேகம் ரமேஷ்,  உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post