தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் 440-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றம் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் தொடங்கியது திரளான பொதுமக்கள் பங்கேற்பு
தொடர்ந்து 10-நாட்கள் நடைபெறும் திருவிழா-வில் பல்வேறு சிறப்பு திருப்பலிகள் நடைபெறுகிறது.
தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் 440-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றம் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கோவில் வளாகத்தின் எதிரே உள்ள கொடிகம்பத்தில் ஏற்றப்பட்டது
ஆகஸ்ட் 5-ம் தேதி வரை மொத்தம் 10-நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா-வில் நற்கருணை பவனி,சப்பர பவனி,மற்றும் வணிக பெருமக்கள்,கப்பல் மாலுமிகள்,உப்பள தொழிலாளர்கள், மீன்பிடிதொழிலாளர்கள், துறவிகள்,
என பல்வேறு மக்களுக்கான சிறப்பு திருப்பலிகள் ஒவ்வொரு நாளும் நடைபெறுகிறது மேலும் பொருட்காட்சிகளும் நடைபெறுகிறது பனிமயமாதா பேராலய திருவிழாவிற்காக இன்று கோலகலமாக தொடங்கிய
கொடியேற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜூவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் , துணை மேயர் ஜெனிதா செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உட்பட பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்
வழக்கமாக ஓவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த திருவிழா-வில் உள்ளூர், வெளியூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டினர் உட்பட பல லட்ச கணக்காண மக்கள் கலந்து கொள்வார்கள் ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகள் கொரொனா காலகட்டம் காரணமாக பல கட்டுபாடுகளுடன் மாதா கோவில் பேராலய திருவிழா நடைபெற்றதால் அதிகப்படியான பக்தர்கள்,
பொதுமக்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலை இருந்தது மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10-நாட்கள் நடைபெற்ற மாதா கோவில் நிகழ்ச்சிகள் அனைத்தையும் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப்-களில் வீட்டில் இருந்தபடி கண்டுகளித்து பிராத்தனை செய்தனர்.
இந்த ஆண்டு எந்த கட்டுபாடுகளும் விதிக்கப்படாத காரணத்தினால் பக்தர்கள்,பொது மக்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர் மேலும் முந்தைய ஆண்டுகளில் நடைபெறுவது போல் திருவிழாவில் பெரும்பாலான பொதுமக்கள் கலந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
10-நாட்கள் நடைபெறும் திருவிழாவிற்காக 3 கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் 1000போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உள்ளனர்.