ஸ்ரீ ஹரிஹர அய்யப்ப பக்தர்கள் சேவா சங்கம் அம்பாள் சாமி பாலபிஷேக குழு சார்பில் 6ஆம் ஆண்டு கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
தொழில் வியாபாரம் கல்வி விவசாயம் பொதுமக்கள் நலன் சிறக்க மற்றும் மழை வேண்டி கோவில்பட்டி ஸ்ரீ ஹரிஹர அய்யப்ப பக்தர்கள் சேவா சங்கம் அம்பாள் சாமி பாலபிஷேக குழு சார்பில் 6 ஆம் ஆண்டு கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
இன்று ஸ்ரீ செண்பகவல்லி அம்மனின் பிரதிஷ்டை நட்சத்திரமானது ரேவதி நட்சத்திரத்தில் 252 பால்குடம் எடுத்து ஸ்ரீ செண்பகவல்லியம்மன் திருக்கோவில் முன்பு இருந்து தொடங்கி எட்டயபுரம் ரோடு, மாதங்கோவில் தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு, மார்க்கெட் ரோடு, தெற்கு பஜார் வழியாக மீண்டும் பால்குட ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது.
இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் 252 பேர் பால்குடம் எடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் மற்றும் ஸ்ரீ பூவனநாத சுவாமிக்கு பாலபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடினை ஸ்ரீ ஹரிஹர அய்யப்ப பக்தர்கள் சேவா சங்கம் மற்றும் அம்பாள் சாமி பாலபிஷேக குழு தலைவர் முருகன் செய்திருந்தனர்.