தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணை மேயர் ஜெனீட்டா செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சில பள்ளிக்கூடங்கள் பராமரிப்பு மற்றும் கடைகள் மறு ஏலம் உள்பட மாநகராட்சி வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு கடற்கரை பூங்காவில் நடைபெறவுள்ள பணிகள் தீhமானம் தவிர அனைத்து தீர்மானங்களும் மேயர் கொண்டு வந்த சிறப்பு தீர்மானங்களும் ஓரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி கூட்டத்தில் பேசுகையில்
அனைத்து பகுதிகளும் முழுமையாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சில பணிகள் முடிவு பெறும் நிலையில் உள்ளது. ஒவ்வொரு மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு தேவையான பகுதிகளில் கால்வாய் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
அதே போல் தேவையற்ற செயல்களில் ஈடுபட்ட ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும். அதே போல் உப்பாத்து ஓடை பகுதிகளும் சுமார் 2 ஏக்கர் மாநகராட்சி இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்ததை மாநகராட்சி நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
மதுரை அருப்புக்கோட்டை சிவகங்கை விருதுநகர் ராமநாதபுரம் தேனீ உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து திருச்செந்தூரில் நடைபெறும் பல்வேறு விழாக்களுக்கு வரும் பக்தர்கள் பாதசாரியாக நடந்து வருகின்றன.
அந்த இடத்தில் அவர்களுக்கு தேவையான ஓய்வு அறை கழிப்பிட வசதி மற்றும் பூங்கா அமைத்து கொடுத்து பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றி கொடுக்கப்படும்.
அதே போல் மத்திய அரசு துறை அதிகாரிகள் தொண்மையான நினைவிடங்களை ஆராய்ந்து அதற்கான பணிகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று கூறியதின் அடிப்படையில் ஆஷ்துரை நினைவு இடத்தை பாரமரிப்பு செய்யப்படுகிறது
அதில் அரசியல் உள் நோக்கத்தோடு சிலர் செயல்படுகின்றன. தேவையற்ற கருத்துகளை கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் தூத்துக்குடி மாநகராட்சி உருவாக்கப்பட்டு வரும் 5ம் தேதி 15 ஆண்டுகள் ஆவதையொட்டி நாம் அது சம்பந்தமாக சில பணிகளையும் மேற்கொள்ள உள்ளோம்
44வது செஸ் போட்டியை உலக அளவில் நடத்தி காட்டுவதற்கு 3 மாதங்களில் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்த முதலமைச்சர் தளபதியாருக்கு மாநகராட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படும் அனைத்து பணிகளும் நல்ல முறையில் நடைபெறுவதற்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், உதவி ஆணையர்கள் சேகர், தனசிங், காந்திமதி, உள்பட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.