அதிமுக தலைமை அலுவலகம் சீலை அகற்ற உத்தரவு- தூத்துக்குடியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!


அதிமுகவின் தலைமை அலுவலமான எம்.ஜி.ஆர் மாளிகை  சாவியை இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தூத்துக்குடியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் உள்கட்சி விவகாரத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக தமிழக அரசு அதிமுக அலுவலகத்திற்கு ஜூலை 11ம் நாள் சீல் வைத்தது.  


சீலை அகற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. 

வழக்கு இன்று மதியம் சென்னை உயர்நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிந்து தீர்ப்பளித்த நீதிபதி சதீஷ்குமார் அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றி சாவியை எடப்பாடி கே.பழனிசாமியிடம் ஒப்படைக்கக் கோரி உத்தரவை பிறப்பித்தார்.


இந்த உத்தரவை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் 

தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள  மாவட்ட கழகம் முன்பும், தூத்துக்குடி பழைய பேருந்து  நிலையம் முன்பும்  பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.


இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் வாழ்க என கோஷங்களை எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், மாணவரணி செயலாளர் விக்ணேஷ், இளைஞர் பாசறை செயலாளர் தனராஜ், ஜோஸ்வா அன்பு பாலன் இலக்கிய அணி செயலாளர் நடராஜன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அருண் ஜெபக்குமார்,


பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ஜெயகணேஷ்,   கவுன்சிலர் வக்கீல் மந்திரமூர்த்தி, வழக்கறிஞர் அணி துணை செயலாளர் சரவணபெருமாள், வக்கீல் முனியசாமி, பகுதி இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம் துணை செயலாளர் டைகர் சிவா, நிர்வாகிகள், பாலஜெயம், சகாயராஜ், சாம்ராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

Previous Post Next Post