தூத்துக்குடியில் நெய்தல் திருவிழா நாளை துவக்கம் - கலை சிறப்புமிக்க சுவர் ஓவியத்தை துவக்கி வைத்த கனிமொழி கருணாநிதி எம்.பி.!


தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், ஸ்பிக் நிறுவனம் இணைந்து நடத்தும் நெய்தல் திருவிழா நாளை (7ம் தேதி) துவங்கி வரும் 10ம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்கிறது. கலைத்திருவிழாவான நெய்தல் திருவிழா 

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில் மாலை 4.30மணி முதல் இரவு 10மணி வரை நடைபெறுகிறது. நெய்தல் திருவிழாவின் சிறப்பினை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் 


மாப்பிள்ளையூரணி அருகேயுள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாக சுவர்களில் ஸ்பான்சர்கள் மூலமாக அரவாணிகள் ஆர்ட் புராஜெக்ட் குழுவினர் மூலமாக கலை சார்ந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.

இதனை இன்று கனிமொழி எம்.பி., தலைமையில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஓவியங்கள் வரைந்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து, நெய்தல் திருவிழா ஏற்பாடுகள் குறித்து கனிமொழி எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது, 


தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்பிக் நிறுவனம் சார்பில் நடைபெறும் நெய்தல் கலைத்திருவிழா மிகவும் சிறப்பாக நடத்தப்பட இருக்கிறது. இவ்விழாவில், மண் சார்ந்த கலைகள், கிராமியக் கலைகள் என தமிழகம் முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். 

நெய்தல் திருவிழாவின் சிறப்பாக பாரம்பரியம்மிக்க உணவுத்திருவிழாவும் நடைபெறுகிறது. இதற்காக மைதானத்தில் 20க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் மக்கள் கலைகளை கண்டு ரசிப்பதுடன், கைவினை கலைஞர்களின் பிரத்யேகமான தயாரிப்புகள், மாவட்டத்திலுள்ள மகளிர் குழுவினரின் சிறப்பு தயாரிப்பு பொருட்களை வாங்கி மகிழவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

புத்தக கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இவ்விழாவின் சிறப்பாக 9ம் தேதி(சனிக்கிழமை) அன்று மாலையில் துவங்கும் விழா மட்டும் மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2மணி வரை 


தொடர்ந்து வில்லுப்பாட்டு, பறையாட்டம்,  கரகாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெறுகிறது. நெய்தல் திருவிழாவின் சிறப்பையும், தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்க்கை முறையினையும், கலைஞர்களின் கலை சிறப்பையும் மக்கள் அறிந்திடும் வகையில் இங்கு சிறப்பு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. 

இதற்கு உதவிய ஸ்பான்சர்களுக்கும், இதற்காக உறுதுணையாக இருந்த மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரணவக்குமாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முறையாக நடைபெறும் மண் சார்ந்த நெய்தல் திருவிழாவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளதற்கு மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம்,  மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார், மாப்பிள்ளையூரணி கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சிவக்குமார்

மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், தொம்மைசேவியர், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெயசீலி, அந்தோணிபவானி மார்ஷல், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பாரதிராஜா மற்றும் திமுக நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post